Enable Javscript for better performance
மாணவர்களுக்கு மடிக் கணினி, சைக்கிள் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு மடிக் கணினி, சைக்கிள் வழங்கும் விழா

    By  போச்சம்பள்ளி,  |   Published on : 06th November 2013 01:03 PM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி, சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     விழாவிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பத்மாவதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 156 மாணவர்களுக்கு மடிக் கணினியும், 62 பேருக்கு சைக்கிள்களையும் பர்கூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் அசோக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பெருமாள், வட்ட வேளாண்மை விற்பனை குழுத் தலைவர் தூயமணி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் திருமாள், ஊராட்சி மன்றத் தலைவர் மனோரஞ்சிதம், துணைத் தலைவர் செல்வம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயந்தி சின்னராஜ் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai