சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     கர்நாடக மாநிலம், பெங்களூர் கே.பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (52). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டம், வாலாஜாவில் நடைபெற்ற உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பேருந்தில் பெங்களூர் திரும்பினார்.
     அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சாலையோர உணவகத்தில் பேருந்து நின்றது. பேருந்திலிருந்து இறங்கிய வேலாயுதம் சீறுநீர் கழிக்க சாலையைக் கடக்க முயன்றார்.
     அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai