சுடச்சுட

  

  "வாக்களர்களைப் புரிய வைப்பதே  சமூக கூட்டணியின் முக்கிய நோக்கம்'

  By  கிருஷ்ணகிரி,  |   Published on : 06th November 2013 01:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சமூக ஜனநாயக கூட்டணியின் நோக்கங்கள் குறித்து வாக்காளர்களைப் புரிய வைப்பதே முதல் பணி என, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அந்தக் கூட்டணியின் வேட்பாளர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
   கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
   அனைத்து சமூதாயத் தலைவர்களின் ஆதரவுடன் தமிழகத்தில், பாமக தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணியின் சார்பில் 5 வேட்பாளர்கள் அடங்கிய மக்களவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், முதல் வேட்பாளராக பாமக தலைவரான என்னை அறிவித்தனர்.
   15 ஆண்டுகளாக நான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்திலுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினேன். அனைத்து பிரச்னைக்கும் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளன.
   அரசியல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலையில் அனைத்து சமூதாய அமைப்புடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். தற்போது சமூக ஜனநாயகக் கூட்டணியின் நோக்கங்கள் குறித்து வாக்காளர்களைப் புரிய வைப்பதே முதல் பணி என்றார் அவர்.
   அப்போது, அந்தக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜி.மாதேஸ்வரன், மாநிலச் சட்ட பாதுகாப்பு அணி துணைச் செயலாளர் இளங்கோ, மாவட்டச் செயலாளர் சிவகுமார், முன்னாள் எம்எல்ஏ மேகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai