சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வியாபாரியைத் தாக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
     ஊத்தங்கரை அருகேயுள்ள தாண்டியப்பனுரைச் சேர்ந்தவர் சரவணன் (32). திருப்பத்தூர் பிரதான சாலையில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.
     இந்த நிலையில், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (27), கோகுல் (24), கார்த்திக் (24), ரஞ்சித்குமார் (23), பிரபாகரன், திருகுமரன் ஆகியோர் பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் தரவில்லையாம்.
     இதுகுறித்து அவர்களிடம் கேட்ட சரவணனை அந்தக் கும்பல் மதுப் பாட்டிலால் தாக்கியதோடு, அவரது கடையை சேதப்படுத்தினராம். இதில், காயமடைந்த சரவணன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கணேசன், கோகுல், கார்த்திக், ரஞ்சித்குமார் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். தலைமறைவான இருவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai