சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியை அடுத்த பாலக்குறியில் விவசாயி முனியப்பன் கொலை மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புள்ள மேலும் 9 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     கிருஷ்ணகிரி அருகே முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டத் தகராறை விலக்கிய விவசாயி முனியப்பன் (60) கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரைக் கொலை செய்தவர்களின் டிராக்டர், மோட்டார் சைக்கிள்களுக்கு, அவரது ஆதரவாளர்கள் தீ வைத்தனர். முனியப்பனை தாக்கிக் கொலை செய்த வழக்கில் பச்சியப்பன் அவரது சகோதரான ராணுவ வீரர் சூரியா ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
     இதுகுறித்து இரு தரப்பினர் மீது வழக்குப் பதிந்த போலீஸார், முனியப்பன் கொலை வழக்கில் ராணுவ வீரரின் தாய் கௌரம்மா (60), அவரது உறவினர் பிரபு (23) ஆகியோரைக் கைது செய்தனர்.
     மேலும், வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தது, வீட்டை தாக்கிய வழக்குகளில், முனியப்பனின் மகன் ராஜா (32), உறவினர்கள் சிவராஜ் (23), முருகன் (26), முத்தப்பா (42), குமரேசன் (23), சக்திவேல் (27) ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்தக் கிராமத்தில் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai