சுடச்சுட

  

  அரசு சார்ந்த வழக்குகளை கையாள  சட்ட ஆலோசகரை  நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By  கிருஷ்ணகிரி,  |   Published on : 07th November 2013 10:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீதிமன்றத்தில் அரசு சார்ந்த வழக்குகளைக் கையாளும் பணிக்குச் சட்ட ஆலோசகரை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் தலைவர் கு.கன்னியப்பன் தலைமை வகித்தார்.
   மாவட்டச் செயலாளர் ஜெ.சி.முருகன், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் முனியன், சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் வாகன வசதி ஏற்படுத்த வேண்டும். பதிவறை எழுத்தருக்கு தர ஊதியம் ரூ.400 வழங்க வேண்டும். 30 சத மேம்பட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
   மக்கள்தொகை அடிப்படையில் வட்டங்களைப் பிரித்து அரசுப் பணியை செம்மைப்படுத்த வேண்டும். சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் நிலையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
   புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai