சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தில்லியில் பேரணி நடத்த  அரசு ஊழியர்கள் முடிவு

    By  ஒசூர்,  |   Published on : 07th November 2013 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தில்லியில் டிசம்பர் 12-ஆம் தேதி பேரணி நடைபெறுகிறது என்று அகில இந்திய அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் முத்துசுந்தரம் தெரிவித்தார்.
     ஒசூரில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக அரசு ஊழியர்கள் சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
     விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை ஒப்படைக்க கூடாது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 50 சதத்தை அடிப்படை ஊதியத்தில் சேர்க்க வேண்டும்.
     புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் டிசம்பர் 12-ஆம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர் என்றார் முத்துசுந்தரம்.
     முன்னதாக, நடைபெற்ற முப்பெரும் விழாவில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயராமன், மாநிலத் துணைத் தலைவர் அகோரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai