Enable Javscript for better performance
மாதாந்திர விளையாட்டுப் போட்டி: 300 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    மாதாந்திர விளையாட்டுப் போட்டி: 300 பேர் பங்கேற்பு

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 07th November 2013 10:54 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில்
     300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
     கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
     தடகளம், நீச்சல், ஹேண்ட்பால் உள்ளிட்ட போட்டிகளில் 80 பெண்கள் உள்பட 300 பேர் பங்கேற்றனர்.
     மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுவிதா, 800 மீட்டர் ஓட்டத்தில் கங்கலேரி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி சுஜிதா, நீளம் தாண்டுதலில் கிருஷ்ணகிரி தூய பால் பள்ளி மாணவி ரஞ்சனிஸ்ரீ, மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் நடுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜி.அஜித், 5,000 மீட்டர் ஓட்டத்தில் சின்னபனகமுட்லு கே.இ.டி. பாலிடெக்னிக் மாணவர் ஜெ.அரீஷ்குமார் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai