சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  98,328 பேர் விண்ணப்பம்

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 07th November 2013 10:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாமில் 98,328 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் புதன்கிழமை தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     ஊத்தங்கரை (தனி) தொகுதியில் உள்ள 254 வாக்குச்சாவடிகள் மூலம் 12,495 பேரும், பர்கூர் தொகுதியில் உள்ள 261 வாக்குச்சாவடிகள் மூலம் 13,944 பேரும், கிருஷ்ணகிரியில் உள்ள 278
     வாக்குச்சாவடிகளில் 17,771 பேரும், வேப்பனஅள்ளியில் உள்ள 263 வாக்குச்சாவடிகள் மூலம் 13,487 பேரும், ஒசூரில் 26,774 பேரும், தளியில் உள்ள 259 வாக்குச்
     சாவடிகள் மூலம் 13,917 பேர் என மாவட்டத்தில் 98,328 வாக்காளர்கள் விண்ணப்பம் செய்தனர்.
     தற்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் கணினியில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
     இந்தப் பணி முடிக்கப்பட்ட படிவங்கள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு மனு செய்தவரிடம் நேரில் விசாரணை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     மனுக்கள் குறித்து நேரடி விசாரணைக்கு அலுவலர்கள் வரும் போது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்கள், ஆவணங்களை வழங்கி
     ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai