சுடச்சுட

    

    இளைஞரைத் தாக்கிய உறவினர் மீது வழக்குப் பதிவு

    By போச்சம்பள்ளி  |   Published on : 08th November 2013 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போச்சம்பள்ளி அருகே கோழிப் பண்ணை உரிமையாளரை தாக்கிய உறவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம்,  கண்ணன் கொட்டாயை சேர்ந்தவர் முருகன் (32). இவர் கோழிப் பண்ணை வைத்துள்ளார். இவரது உறவினர் பாலகிருஷ்ணன் (40). இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் உள்ளதாம். இந்த நிலையில், தளிகிபட்டியில் முருகன் மீது பாலகிருஷ்ணன் மிளகாய் பொடியைத் தூவியும், கத்தியால் குத்தி கீழே தள்ளினாராம்.  முருகனின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    இதையடுத்து, பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து முருகன், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai