சுடச்சுட

  

  உணவுப் பதப்படுத்தும் தொழில்களுக்கு25 சத மானியத்துடன் கடனுதவி

  By கிருஷ்ணகிரி  |   Published on : 08th November 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில்சாலைகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு 25 சத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் தெரிவித்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற உணவுப் பதப்படுத்தும் இயக்கக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடு, உணவுப் பதப்படுத்தும் தொழில்சாலைகளை ஏற்படுத்துதல், நவீனப்படுத்துதல் ஆகிய இனத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள், பால், கறி, மீன் போன்றவற்றைப் பதப்படுத்தி, உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தேங்காய், காளான் போன்றவற்றைப் பதப்படுத்தி, உற்பத்தி செய்யும் பொருள்களை தயார் செய்யும் நிறுவனங்களை புதிதாக ஏற்படுத்தவும், நவீனப்படுத்தவும் இந்தத் திட்டத்தின் மூலம் 25 சத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

  தோட்டக்கலை அல்லாத உணவுப் பொருள்களான பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருள்கள், நடமாடும் குளிரூட்டும் வாகனம், விநியோக மையங்கள் ஏற்படுத்த 35 சத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை நிதியுதவி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

  இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுமதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திரன், அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai