சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

  அருள்மிகு ஐயப்பன் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து பூஜைகளுடன் தொடங்கியது. புதன்கிழமை தீர்த்த சங்கர்ஷண பூஜை, பூண்ணியாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  வியாழக்கிழமை விமானத்துக்கு கும்பாபிஷேகமும், ஐயப்பன் சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

   மாலையில் விளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

  விழாவை முன்னிட்டு, சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai