சுடச்சுட

  

  விரைவுப் பட்டா மாறுதல் முகாம்: கிருஷ்ணகிரியில் 2,518 பேர் மனு

  By கிருஷ்ணகிரி  |   Published on : 08th November 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரியில் வட்ட அளவில் நடைபெற்ற விரைவுப் பட்டா மாறுதல் சிறப்பு முகாமில், 2,581 மனுக்கள் வியாழக்கிழமை பெறப்பட்டன.

  கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக். பள்ளி வளாகத்தில் கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிக்கான பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆலப்பட்டி வருவாய் உள்பிரிவில் 308, கிருஷ்ணகிரி 718, வேப்பனப்பள்ளியில் 167, குருபரப்பள்ளியில் 150, பர்கூரில் 306, பாலேப்பள்ளியில் 219, பெரியமுத்தூரில் 307, காவேரிப்பட்டணத்தில் 280, என 8 வருவாய் உள் பிரிவில் மொத்தம் 2,518 மனுக்கள் பெறப்பட்டன.

  முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், 40 பேருக்கு உள் பிரிவில் பட்டா மாறுதலும், 62 பேருக்கு உள் பிரிவு இல்லாத பட்டா மாறுதல் என மொத்தம் 102 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.

  பொதுமக்கள் அவதி

  முகாம் நடைபெற்ற இடம் நகரை விட்டு 2 கி.மீ. தொலைவில் இருந்ததால், கிராமங்களிலிருந்து வந்த முதியவர்கள், நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்டனர்.

  இனி வரும் காலங்களில் இதுபோன்ற முகாம்களை நகரின் மையப் பகுதியில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai