Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து10 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து10 பவுன் நகை திருட்டு

    By ஒசூர்  |   Published on : 08th November 2013 05:39 AM  |   அ+அ அ-   |    |  

    ஒசூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து

    10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி ஊராட்சி காந்திநகரைச் சேர்ந்தவர் வேலு (48). இவரும், இவருடைய மனைவி ரேவதியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதால், வீட்டை பூட்டிவிட்டு வியாழக்கிழமை வேலைக்குச் சென்றனர்.

    பணி முடிந்து வீடு திரும்பி வந்துப் பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 10 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு திடுக்கிட்டனர்.

    இதுகுறித்து வேலு கொடுத்த புகாரின் பேரில், அட்கோ போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    kattana sevai