சுடச்சுட

  

  போச்சம்பள்ளி அருகே ஹோட்டல் பணியாளரைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

  போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் அங்குள்ள ஹோட்டலில் பணிபுரிகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (29), ஊத்தங்கரை வட்டம், காமாட்சிப்பட்டியைச் சேர்ந்த ஞானபிரகாஷ் (30), தருமபுரி மாவட்டம், வெள்ளாளபட்டியை சேர்ந்த தன்ராஜ் (35) ஆகிய மூவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றனராம். இவர்களிடம் சாப்பிட்டதற்கான பணத்தை தருமாறு  கல்யாணசுந்தரம் கேட்டாராம். இதையடுத்து, மூவரும் சேர்ந்து அவரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடினராம்.

  இதுகுறித்து, நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் கல்யாணசுந்தரம் புகார் செய்தார்.

  புகாரின் பேரில், செல்வம், ஞானபிரகாசம் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தப்பி ஓடிய தன்ராஜை  தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai