சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 341 பேருக்கு விரைவு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

  முகாமுக்கு வட்டாட்சியர் எ.அப்துல் முனீர் தலைமை வகித்தார். ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கிருஷ்ணன், பேருராட்சித் தலைவர் பூபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கண்ணன், ஒன்றியச் செயலர் நாராயணசாமி, ஒன்றியப் பொருளாளர் சேட்டுக்குமார், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அண்மையில் நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 4,086 மனுக்களில், முறையான ஆவணங்களுடன் பெறப்பட்ட உள்பிரிவு அல்லாத தகுதியுள்ள 463 மனுக்களில் 341 மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. விழாவில் சம்பூரணம், நில அளவை வட்ட துணை ஆய்வாளர் நரேந்திரசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai