சுடச்சுட

  

  இரு சக்கர வாகனங்கள் மோதல்: அதிமுக பிரமுகர் சாவு

  By போச்சம்பள்ளி  |   Published on : 09th November 2013 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போச்சம்பள்ளி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் அதிமுக பிரமுகர் உயிரிழந்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், எர்ரம்பட்டியைச் சேர்ந்தவர் பூ.மகாராஜன் (45). இவர் போச்சம்பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

  அப்போது, எதிரே பூதனூரைச் சேர்ந்த முனியப்பன் மகன் சின்னசாமி (30) இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இருவரின் வாகனங்களும் மோதிக் கொண்டதில் மகாராஜனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். முனியப்பனும் தலையில் காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார்.

  விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மகாராஜன் அதிமுக பிரமுகராவர்.

  மிளகாய்ப் பொடியைத் தூவிபெண்ணிடம் நகை பறிப்பு

  அரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அரூர் அருகேயுள்ள அ.பள்ளிப்பட்டி செங்காட்டூரைச் சேர்ந்த சின்னவெள்ளை மனைவி லலிதா (66). இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார்.

  அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், லலிதா மீது மிளகாய்ப் பொடியைத் தூவினராம். பின்னர், அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில், அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

  ஒசூரில் சமகவினர் ஆர்ப்பாட்டம்

  இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, ஒசூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஒசூர் ராம் நகரில் எதிரே மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஒசூர் நகராட்சி அலுவலகம் எதிரே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்தையொட்டி, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai