சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே 500 கிலோ ரேஷன் அரிசி  பறிமுதல்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 09th November 2013 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    வேப்பனஅள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் விஜயராகவன், பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஜெயகுமார் உள்ளிட்டோர் குடும்ப அட்டைகளை தணிக்கை செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

    பண்ணப்பள்ளி, ஏகடாதாம்பள்ளி கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட போது சாலையோரத்தில் 500 கிலோ  ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. கர்நாடக மாநிலத்துக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அந்த அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பின்னர், அவை கிருஷ்ணகிரி நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, யாரும் கைது செய்யப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai