சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஎஸ் கொசுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறையினர் குழுவாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

  வட்டார மருத்துவர்கள்,

  கண்காணிப்பாளர் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 உதவியாளர்கள், பேரூராட்சிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள் என

  நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்தக் காய்ச்சல் குறித்து அறிகுறிகள் தெரிய வந்தால் உடனே சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு மருத்துவ அலுவலர்

  தலைமையிலானக் குழுவினர் சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

  அந்தப் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருப்பது தெரிய வந்தால், முகாமிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai