சுடச்சுட

  

  மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 09th November 2013 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டியதாக 22 ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  அதிக வேகத்துடன், அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி உயிரிழப்பு ஏற்படுத்திய 44 ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு தாற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

  மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் கடந்த 10 மாதங்களில் மேற்கொண்ட செயலாக்க பணியின்போது 14,123 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 2,075 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

  இதில் அதிக பாரம் ஏற்றிய 372 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

  இதன்மூலம் இணக்க கட்டணம் ரூ.33.80 லட்சமும், வரியாக ரூ.18.32 லட்சமும் வசூலிக்கப்பட்டது.

  மேலும், ரூ.26.87 லட்சம் இணக்க கட்டடம் வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் டிபி.ராஜேஷ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai