சுடச்சுட

    

    விளையாட்டு போட்டிகளில் மத்தூர் அரசுப் பள்ளி சிறப்பிடம்

    By போச்சம்பள்ளி  |   Published on : 09th November 2013 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் கபடிப் போட்டியில் மிக மூத்தோர் பிரிவில் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அணி முதலிடத்தைப் பெற்றது.

    இறகுப் பந்துப் போட்டியில் மிக மூத்தோர் பிரிவில் அதே பள்ளி மாணவர்கள் அஜித், அப்சர் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தனர்.

    சதுரங்கப் போட்டியில் மூத்தோர் பிரிவில் மாணவர் மகேந்திரன் முதலிடம் பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆறுமுகம், குமரன் ஆகியோர் பள்ளித் தலைமையாசிரியர் எம்.ஜி. ஜெயபால், பெற்றோர்- ஆசிரியர்கள் கழகத் தலைவர் எஸ்.கணேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai