சுடச்சுட

  

    கிருஷ்ணகிரியை அடுத்துள்ள எலுமிச்சங்கிரியில் வேளாண் அறிவியல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

  கிருஷ்ணகிரியை அடுத்துள்ள எலுமிச்சங்கிரியிலுள்ள டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார்.

  இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மண்டலத் தலைவர் எஸ்.பிரபுகுமார், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முஸ்தபா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தின்  தலைவர் எம்.என். புத்தர், வேளாண்மை அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  உயர் அடர்வு முறையை மா, வாழை சாகுபடியில் பிரபலப்படுத்துவது, நெல் சாகுபடியில் ஆள்களின் பற்றாக்குறையைப் போக்க நேரடி நெல் விதைப்பு, நடவுப் பணியில் இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட கருத்துகள் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai