சுடச்சுட

  

  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆசிரியர்கள் தூண்டுதலாக இருக்க வேண்டும்

  By கிருஷ்ணகிரி  |   Published on : 10th November 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்களின் அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆசிரியர்கள் தூண்டுதலாக இருக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

  கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

  கண்காட்சியை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியது:

  இந்தக் கண்காட்சியில் 266 பள்ளிகளைச் சேர்ந்த 1,064 மாணவர்கள், தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

  மாணவர்களின் அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆசிரியர்கள் தூண்டுதலாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் செலுத்துவர்.

  இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், மேலும் தங்களது திறமைகளை வளர்த்து காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்று வெற்றி பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

  கண்காட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார், நா.மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏ, நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் செ.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விலையில்லா மின் பொருள்கள் அளிப்பு:

  கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திம்மாபுரம், பன்னிஅள்ளி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 2,994 பயனாளிகளுக்கு விலையில்லா மின்பொருள்களை அமைச்சர் கே.பி.முனுசாமி வழங்கினார்.

  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் தலைமை வகித்தார்.

  நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜமுனா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai