சுடச்சுட

  

  எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணம் அறியும் வசதி

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 10th November 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரியில் மின் நுகர்வோரின் வசதிக்காக மின் கட்டணங்களை செல்பேசிக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக, மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் பி.சின்னதம்பி தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  கிருஷ்ணகிரியில் மின் நுகர்வோரின் நலன் கருதி, மாதாந்திர மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் இந்தியன் வங்கியில் எஸ்.எம்.எஸ். பேங்கிங், ஏ.டி.எம். டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், தபால் நிலையம், சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய கிளைகளில் நேரடியாக செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்களின் செல்பேசி எண்ணை பதிவு செய்யும் மின் நுகர்வோருக்கு மதிப்பு கூட்டுச் சேவையாக அவர்களது மின் கட்டணம், கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் போன்ற விவரங்கள் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்றார் சின்னதம்பி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai