சுடச்சுட

  

  சூளகிரியில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடக்கம்

  By ஒசூர்,  |   Published on : 10th November 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒசூர் வட்டம், சூளகிரி புறவழிச் சாலையில் புதிய பேருந்து நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் என தலா ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கட்டடப் பணிகளுக்கான பூமி பூஜையை  நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சனிக்கிழமை  தொடக்கிவைத்தார்.

  நிகழ்ச்சியில் விழாவில் அவர் பேசியது:

  தமிழகத்தில் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயன்தரும் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

  ஏழைகளுக்கு விலையில்லா மின் விசிறி, கிரைண்டர், மிக்சி, கறவை மாடு, ஆடு, மாணவர்களுக்கு மடிக் கணினி, இலவசப் பேருந்து வசதி என அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப வசதிகளையும் செய்து தருகிறார்.

  வரும் மக்களைத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் முனுசாமி.

  நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் அசோக்குமார், சூளகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மது (எ) ஹேம்நாத், துணைத் தலைவர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், ஒன்றிய இலக்கிய அணித் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai