சுடச்சுட

  

  அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 22 உடும்புகள் பறிமுதல்

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 11th November 2013 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 22 உடும்புகளை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தம்பதி கைது செய்யப்பட்டனர்.

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து பழனி வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அரசுப் பேருந்தில் சாக்குப் பையில் உடம்புகள் கடத்தி வரப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

  கிருஷ்ணகிரி வனச் சரகர் அ.பாபு தலைமையில், வனவர் குணசேகரன், வனக் காப்பாளர்கள் சிவக்குமார், வேணுலு, கணபதி ஆகியோர் கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையத்தில் கண்காணித்து வந்தனர்.

  அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்து சாக்குப் பையுடன் வெளியே வந்த தம்பதியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், உடும்புகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலையைச் சேர்ந்த மொழுகு (45), அவரது மனைவி சேட்டு (எ) ராணி (35) என்பது தெரிய வந்தது.

  இதையடுத்து, இருவரையும் கைது செய்த வனத் துறையினர், அவர்களிடமிருந்த உடும்புகளையும் பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி அருகே உள்ள சிக்காரி மேடு, திப்பனப்பள்ளி ஆகிய பகுதிகளில் உணவுக்காக உடும்புகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 22 உடும்புகளும் தொகரப்பள்ளி, நாரலப்பள்ளி காப்புக் காட்டில் விடப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai