சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே ஞாயிற்றுக்கிழமை கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள கரும்புப் பயிர் சேதமடைந்தது.

  காவேரிப்பட்டணம் அருகே உள்ள மில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால் (48). இவரது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவரது கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மா.முருகன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai