சுடச்சுட

  

  சட்டம், மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வலியுறுத்தல்

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 11th November 2013 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசு சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியது.

  இந்திய மாணவர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 2-ஆவது மாநாடு கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ரவி தலைமை வகித்தார்.

  மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி, துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எக்ஸ்.இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி, பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரிகளில் உடல்கல்வி இயக்குநர்கள், பேராசிரியர்கள், நூலகர் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

  தேன்கனிக்கோட்டையில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்க வேண்டும். ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக எம்.வினோத்குமாரும், துணைத் தலைவர்களாக எம்.சக்தி, கே.முத்துபாண்டி, செயலாளராக வி.ரவி என மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai