சுடச்சுட

  

  தமிழ் ஆராய்ச்சி காலாண்டு இதழ் அறிமுக விழா

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 11th November 2013 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செம்புலம் பண்ணாட்டுத் தமிழ் ஆராய்ச்சிக் காலாண்டு இதழ் அறிமுக விழா கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  பாரதி, பாரதிதாசன் தமிழ் மன்றம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி இலக்கிய மன்றம் ஆகியவை இணைந்து பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சிக் காலாண்டு இதழான "செம்புலம் நூல்'  அறிமுக விழா கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

  பாரதி, பாரதிதாசன் தமிழ் மன்ற மாவட்டச் செயலாளர் கவிஞர் கருமலை பாரதி தலைமை வகித்தார். பதவி உயர்வு பெற்றப் பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.சின்னசாமி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சி.சின்னராசு, நூல் ஆசிரியர் சு.சதாசிவம், குடியாத்தம் தமிழ் சங்கப் பொதுச் செயலாளர் பா.சம்பத்குமார், நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் தா.நீலகண்டபிள்ளை, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சௌ.கீதா, அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் நா.பழநிவேலு உள்ளிட்டோர் இதழ் குறித்துப் பேசினர். இந்தக் காலாண்டு இதழில் ஆய்வியல் நிறைஞர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோரின் கட்டுரைகள் இடம் பெறும் எனவும் இதழ் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai