சுடச்சுட

  

  ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 12th November 2013 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி வட்டத்தில் கட்டிநாயனப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ஸ்ரீவள்ளி தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான (ஆதார் அட்டை) புகைப்படம் எடுக்கும் பணி கட்டிநாயனப்பள்ளியில் வரும் 14ஆம் தேதி வரையிலும், கட்டிகானப்பள்ளியில் வரும் 20ஆம் தேதி வரையிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

  எனவே, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகக் கொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai