சுடச்சுட

  

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 12th November 2013 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்து, கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் கே.நரசிம்மன் தலைமை வகித்தார்.

  தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.கெம்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவுவதைக் கைவிட வேண்டும் எனவும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு அல்ல என இந்தியா அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai