Enable Javscript for better performance
ஒசூரில் குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

    By ஒசூர்,  |   Published on : 12th November 2013 06:02 AM  |   அ+அ அ-   |    |  

    குடிநீர் வழங்கக் கோரி, ஒசூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    ஒசூர் நகராட்சி 25-ஆவது வார்டு பகுதிக்குள்பட்ட கற்பகம் நகர், நரசிம்மா காலனி, பழைய பேருந்து நிலையம், பார்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 25 நாள்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதாம்.

     இதனால், அந்தப் பகுதி மக்கள் குடம் குடிநீரை ரூ.5 கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, தினமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் ஒசூர் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

    நகராட்சி ஆணையாளர் இளங்கோவன், தினமும் குடிநீர் விநியோகம் செய்யவதாக அளித்த உறுதியின்பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

    kattana sevai