சுடச்சுட

    

    கடையடைப்புக்கு ஆதரவு கோரி மதிமுக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 12th November 2013 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்புக்கு ஆதரவு கோரி, கிருஷ்ணகிரியில் மதிமுக சார்பில் திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (நவ.12-ஆம் தேதி) கடையடைப்பு நடைபெறும் என தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.

    இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகரில் மதிமுக நகரச் செயலாளர் ஆர்.அசோக்குமார் தலைமையில் அந்தக் கட்சியினர் வணிகர்களைச் சந்தித்து கடையடைப்புக்கு ஆதரவுகோரி, துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai