சுடச்சுட

    

    தொழிலாளர் நல அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 12th November 2013 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் நல அலுவலரைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்படும் ரஷிய பன்னாட்டு கனரக வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைத் தாற்காலிகப் பணிநீக்கம் மற்றும் நிரந்தரப் பணி நீக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், தொழிலாளர்கள் சிலரை வெளிமாநிலங்களுக்கும் பணியிடமாற்றம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

    இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, மாவட்ட தொழிலாளர் நல அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த அமைப்பின் தலைவர் தி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்புத் தலைவர் சு.பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai