சுடச்சுட

    

    ஒசூரில் ரயில் மறியல் போராட்டம்: 300-க்கும் மேற்பட்டோர் கைது

    By dn  |   Published on : 13th November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி, ஒசூர் ரயில் நிலையத்தில் மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய சோஷலிச ஜனநாயக கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தபால் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல, ஊத்தங்கரை அருகே 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்திய சோஷலிச ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவர் ஷபியுல்லாகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மதிமுக மாவட்டச் செயலாளர் மாதையன், ஒசூர் நகரச் செயலாளர் வெள்ளச்சாமி ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோவேந்தன் தலைமையில், ஒசூர் தபால் அலுவலகம் முன் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஊத்தங்கரை 110 பேர் கைது:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில், ம.தி.மு.க மாவட்ட அவைத் தலைவர் சம்பத் தலைமையில், தருமபுரி அவைத் தலைவர் சாமிகண்ணு, கிளைச் செயலாளர் விஜயன், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் தருமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 40 பேர் பங்கேற்றனர்.

    இவர்களை போலீசார் கைது செய்தனர். சாமல்பட்டியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai