சுடச்சுட

  

  கடைகளில் அதிகாரிகள் ஆய்வு: வணிகர் சங்கத்தினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

  By dn  |   Published on : 13th November 2013 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரியில் உள்ள கடைகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டபோது, வணிகர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி மற்றும் புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் தரமற்றப் பொருள்கள் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷிற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் கந்தசாமி தலைமையில் கூட்டுறவுத் துணைப் பதிவாளர் கந்த ராஜா, வட்ட வழங்கல் அலுவலர் விஜயராகவன், தனி வட்டாட்சியர் ஜெ.ஜெயபால், உணவுப் பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, வருவாய் ஆய்வாளர்கள் துரைமுருகன், ரூகேஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் அடங்கியக் குழுவினர் பல்பொருள் அங்காடி மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

  பல்பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு வந்த வணிகர் சங்கத் தலைவர் கேசவன் உள்ளிட்டோர் அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட வணிகர் சங்கத்தினர் கடும் சொற்களைப் பயன்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமற்ற உணவு தானியங்களின் மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

  தொடர்ந்து, அதிகாரிகள் கொண்ட குழுவினர், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற இனிப்புகள், காலாவதியான உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வுக் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், இத்தகைய திடீர் ஆய்வுகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai