Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் குடிநீர் உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் குடிநீர் உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதம்

    By dm  |   Published on : 13th November 2013 05:19 AM  |   அ+அ அ-   |    |  

    குடிநீரை உற்பத்தி செய்ய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என அறிவிக்க கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு   குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மண்டலச் செயலாளர் டி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் கே.விக்ரமன், டி.ஜெயபிரகாஷ், முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் பி.கே.காவேரி, எம்.ஆர்.ராஜேந்திரன், பி.வேணுகோபால், கே.ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     குடிநீரை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மாசற்ற தொழில்சாலை என வகைப்படுத்தி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.  குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அத்தியாவசியமான தொழில்சாலை எனவும், பச்சை நிற தொழில்சாலை எனவும் வகைப்படுத்தி, தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai