சுடச்சுட

    

    கவிக்கோ கவிஞர் விருது:பரிசுத் தொகை ரூ.1 லட்சமாக அதிகரிப்பு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 14th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கவிக்கோ கவிஞர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கவிக்கோ அறக்கட்டளை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆடிட்டர் ஷாஜகான், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கிருஷ்ணகிரியில் இசுலாமிய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் கவிக்கோலின் பவள விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கவிக்கோ அறக்கட்டனையின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இனிவரும் காலங்களில் கவிக்கோ அறக்கட்டனையின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகைகள் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டன.

    அதன்படி கவிக்கோ கவிஞர் விருது ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாகவும், வேலூர் மாவட்ட மாணவர்கள் விருது ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், திருவான்மியூர் கவிஞர் விருது ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க முடி செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai