சுடச்சுட

    

    காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த ராணுவ வீரர் கைது

    By கிருஷ்ணகிரி  |   Published on : 14th November 2013 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ராணுவ வீரரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், முதல்நிலை காவலர் சங்கர் உள்ளிட்டோர், கிருஷ்ணகிரி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் சென்ற பூளிகாந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை தடுத்து நிறுத்தி, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் ஆபராதம் விதித்தனர்.

    இந்த நிலையில் அங்கு வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர், சேகர்(35), போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தும், அவர்களை தாக்கியும் மிரட்டல் விடுத்தாராம்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்த ராணுவ வீரர் சேகரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai