சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியில் சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்ஸாமியர்கள் புதன்கிவமை முகரத்தை அனுசரித்தனர்.

    உலகம் முழுவதும் இஸ்ஸாமியர்கள் முகரம் வியாழக்கிழமை அனுசரிக்கின்றனர்.  இந்தியாவில் காலதாமதமாக பிறை தெரிந்ததால், வெள்ளிக்கிழமை முகரம் கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த ஜெகதேவியில் வசிக்கும் சன்னி பிரிவினர், புதன்கிழமை முகரத்தை கடைபிடித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கத்தி மற்றும் சிறிய கூர்மையான ஆயுதங்களால் தங்களைத் தாங்களே தாக்கிக் கொண்டனர்.  இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வேலூர், வாணியம்பாடி மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திராவைச் சேர்ந்த இஸ்ஸாமியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai