சுடச்சுட

  

  கிருஷ்ணகிரியில் லோத் அதாலத் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

  க்ரிஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி சார்பு நீதிபதி எம்.சஞ்சீவி பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோத் அதாலத் கூட்டமானது வரும் 23-ஆம் தேதி கூட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

  இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைக்கு தொடர்பான வழக்குகள் மீது சுமூகமான மற்றும் விரிவான தீர்வு காண மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கடேசன், சுமதி, இந்தியன் வங்கியின் மேலாளர் ருத்திரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai