சுடச்சுட

  

  கர்நாடகத்துக்கு மணல் கடத்தல்:லாரி ஓட்டுநர்கள் கைது

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 15th November 2013 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகத்துக்கு மணலை இரண்டு லாரிகளில் கடத்தியதாக, ஓட்டுநர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குருபரப்பள்ளி அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்துவது தெரிய வந்தது.

  இதைத்தொடர்ந்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர்களிடம் விசாரணை செய்ததில், திருச்சி மாவட்டம், குளித்தலை லாலாபேட்டையிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு மணலைக் கடத்துவது தெரிய வந்தது.

  இதுகுறித்து குருபரப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர்களான திருச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (20), வெங்கடேசன் (24) ஆகியோரை கைது செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai