சுடச்சுட

  

  மருமகன் மீது தாக்குதல்:மாமியார் உள்பட நால்வர் தலைமறைவு

  By ஒசூர்  |   Published on : 15th November 2013 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனைவியை அழைத்து வரச் சென்ற கணவரை தாக்கி கிணற்றில் தூக்கி வீசியதாக, மாமியார், மைத்துனர்கள் உள்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  கிருஷ்ணகிரி அருகேயுள்ள செம்படமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவரது மனைவி சரஸ்வதி. இரு குழந்தைகள் உள்ளனர்.

  கடந்த சில நாள்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, சூளகிரி அருகேயுள்ள ஒசஅள்ளியிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சரஸ்வதி சென்றுவிட்டாராம்.

  இந்த நிலையில், ஒசஅள்ளிக்கு புதன்கிழமை சென்ற கிருஷ்ணன் சரஸ்வதியை வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம்.

  அப்போது கிருஷ்ணனின் மாமியார் குள்ளம்மாள், மைத்துனர்கள் வெங்கட்ராமன், சீனன், ஏழுமலையான் ஆகியோர் சேர்ந்து சரஸ்வதியை அனுப்ப மறுத்து கிருஷ்ணனுடன் தகராறில் ஈடுபட்டனர்.

  மேலும், அவரை தாக்கி அங்குள்ள தண்ணீரில்லாத கிணற்றில் தூக்கி வீசி விட்டுச் சென்றனராம்.

  பலத்த காயமடைந்த கிருஷ்ணன் கூச்சலிட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில், சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான குள்ளம்மாள் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai