சுடச்சுட

  

    ஒசூர் அருகே மத்திகிரியை அடுத்துள்ள நாகொண்டப்பள்ளியில் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இதையொட்டி, 108 கலசாபிஷேகம் அமைத்து கடந்த 3 நாள்களாக யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

  கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரஹ ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.

  கும்பாபிஷேக  நாளான வியாழக்கிழமை கோபுரக் கலசங்களுக்குப் பட்டாச்சார்யர்கள் புனித நீரை ஊற்றினர்.

  விழாவில் மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai