சுடச்சுட

  

  "அயோடின் உப்புச் சத்துக் குறைபாடே நோய்களுக்கு காரணம்'

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 16th November 2013 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அயோடின் உப்புச் சத்துக் குறைபாடே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணம் என, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் தெரிவித்தார்.

  கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு உப்பு நிறுவனம், யுனிசெப் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய வியாழக்கிழமை அயோடின் உப்பு குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் பேசியது:

  அயோடின் உப்புச் சத்து உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. அயோடின் உப்பு குறைபாட்டால் மூளை வளர்ச்சியின்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சிறு குழந்தைகளின் இறப்புக்கு அயோடின் உப்புச் சத்துக் குறைபாடும் ஒரு காரணம். சாதாரண உப்பை பயன்படுத்துவதால், தைராய்டு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அயோடின் உப்புச் சத்துக் குறைபாடே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணம் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில், அயோடின் உப்பு குறித்த கையேட்டை வெளியிட்டு, அவற்றை மாணவர்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மாணவர்கள் அயோடின் உப்பை பயன்படுத்துவது குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

  இதில், உப்பு நிறுவனத்தின் செயலாளர் பி.டி.தயானந்தன், தமிழ்நாடு கிராமியக் கலை வளர்ச்சி மையத்தின் இயக்குநர் பி.சோமசுந்தரம், பள்ளித் தலைமையாசிரியர் வே.சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai