சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வேங்கனூர் கிராமத்தில் கோழியை மலைப் பாம்பு விழுங்கியது.

  வேங்கனூர் கிராமம் மலையால் சூழப்பட்டதாகும். இதனால், இங்கு அடிக்கடி மலைப் பாம்புகள் புகுவது வாடிக்கையாகி விட்டது. வேங்கனூர் கிராமத்தில் உள்ள ஒரு புதரிலிருந்து வெள்ளிக்கிழமை கோழியின் சப்தம் கேட்டது.

  இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது சுமார் 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒரு கோழியை விழுங்கிக் கொண்டிருந்து.

  இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அந்த மலைப் பாம்பைப் பிடித்து பெரியமலை காட்டுப் பகுதியில் விட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai