சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் அன்னதானம்:உணவு தானியங்கள் அனுப்பி வைப்பு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 16th November 2013 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகா கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் வகையில், கிருஷ்ணகிரியிலிருந்து அருள்மிகு அண்ணாமலையார் அன்னதானம் சங்கம் சார்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

    மகா தீபத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் செயல்படும் அருள்மிகு அண்ணாமலையார் அன்னதானச் சங்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இதன்படி, இப்போது 19-ஆவது ஆண்டாகப் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், 3 ஆயிரம் கிலோ அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலையில் கிருஷ்ணகிரி சாலையில்  ஆணாய் பிறந்தான் ஊராட்சிக்குச் சொந்தமான பக்தர்கள் ஓய்வுக் கட்டடம் அருகில் உள்ள புற்றுக் கோயில் அருகே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக அன்னதானச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai