சுடச்சுட

  

  தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசர சிகிச்சைப் பிரிவு

  By கிருஷ்ணகிரி  |   Published on : 16th November 2013 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி நகர மதிமுக வலியுறுத்தியது.

  இதுகுறித்து அந்தக் கட்சியின் கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் ஆர்.அசோக்குமார் ராவ், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:

  அண்மைக்காலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்கின்றன. இவ்வாறு விபத்துகளில் சிக்குபவர்களை அவசர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.

  தற்போது நகரில் அதிக போக்குவரத்து நெரிசல்கள் இருப்பதால், விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. 

  எனவே, இதைக் கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசரகால சிகிச்சைப் பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai