சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மின்வெட்டு இரண்டு மணி நேரமாக இருந்தது. தற்போது அது 5 மணி நேரம் முதல் 7 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  மின் உற்பத்தி குறைவால் ஏற்பட்டுள்ள இந்த மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோர் பெரும்  அவதிக்கு உள்ளாகியுள்ளனர். காலை, பகல், மாலை, இரவு என அறிவிக்கப்படாத மின்வெட்டு தற்போது அமலில் உள்ளது. கடந்த சில நாள்களாக நடைமுறையில் உள்ள இந்த மின்வெட்டு நேரம் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் முன் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  தமிழக ஆளுநர்

  இன்று ஒசூர் வருகை

  ஒசூர், நவ.15:  தமிழக ஆளுநர் ரோசய்யா சனிக்கிழமை (நவ.16) தேன்கனிக்கோட்டையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக ஒசூர் வருகிறார்.

  ஒசூரில் இருந்து அவர் கார் மூலம் தேன்கனிக்கோட்டைசென்று தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அவர் பெங்களூர் வழியாக சென்னை செல்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai