சுடச்சுட

  

  ஒசூரில் 600 ஆண்டுகள் பழைமையான விநாயகர் சிலையை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு உடைத்துச் சேதப்படுத்தினர்.

  ஒசூர் பாகலூர் சந்திப்பில் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் வேணுகோபால் சுவாமி கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து, எதிரில் வீர ஆஞ்சநேயர் கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

  இந்தக் கோயிலில் இருந்த 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விநாயகர் சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

  வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் அதிகாலை சாமி கும்பிட வந்த போது இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் சேலம் கோட்டப் பொறுப்பாளர் விஷ்ணுகுமார், விநாயகர் சிலையை உடைத்தவர்களை விரைவில் கண்டுபிடித்து, போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai